இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் காலி பணியிடங்கள் அனைத்தும் தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தின் ஆட்கள் சேர்ப்புகளுக்கான சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது எழுத்து தேர்வு தொடர்ந்து நேர்காணலுக்கும் மதிப்பெண்கள் கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் குறைந்த பட்சம் 40 சதவீதம் மதிப்பெண்ணை பெற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நேர்காணலின் போது 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் கட்டாயம். இறுதியாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியலை தேர்வுகளையும் தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டிலும் சரியான அளவு மதிப்பெண் பெற்று இருந்தால் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.