பீகார் மேற்கு வங்க எல்லையில் நடந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. திரளானோர் பங்கேற்ற யாத்திரையில் இருந்து திடீரென பெண் ஒருவர் ராகுலின் காரை நோக்கி வந்தார். கார் முன் பெண் வருவதை கண்டு ஓட்டுனர் உடனே பிரேக் பிடித்த போது கயிறு பட்டதில் கண்ணாடி உடைந்தது. அநீதிக்கு எதிராக போராடும் ராகுல் காந்திக்கு நாட்டு மக்கள் துணை நிற்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. பீகார் மாநிலம், மால்டா என்ற இடத்தில் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.