மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கி பேசினார், அவர் பேசியதாவது, பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுள்ளன. நீதி என்பதை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை, மக்கள் நலன் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியினருக்கும் 10% இட ஒதுக்கீடு. நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும். 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வரம்பை உயர்த்த அரசியல் சாசனம் திருத்தப்படும்.இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி.பாஜக ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை வொர்க் வெல்த் வெல்ஃபேர் என்ற அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படும்.

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க புதிதாக சட்டம் இயற்றப்படும். அரசு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் நடைமுறை ரத்து செய்யப்படும்.  நாடு முழுவதும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை இலவச மதிய உணவு அளிக்கப்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் பட்டியல் இன மாணவர்களுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் உச்சவரம்பு ரூபாய் 7.5 லட்சம் ஆக உயர்த்தப்படும். நாடு முழுவதும் மாணவர்கள் வாங்கியுள்ள கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பணி விண்ணப்ப கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி கட்டாயமாக்கப்படும். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை திருத்தப்படும்.

நீட், க்யூட் தேர்வுகள் மாநிலங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. மாநில அரசுகளே தங்களுக்கான தேர்வு முறையின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். மாநில அரசர்களுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக் கொள்கை திருத்தப்படும். 8வது அட்டவணையில் புதிய பிராந்திய மொழிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும். அரசு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் நடைமுறை ரத்து செய்யப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அங்கன்வாடிகளில் புதிதாக 14 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். 100 நாள் தினசரி ஊதியம் ரூபாய் 400 ஆக நிர்ணயம் செய்யப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் முறை கைவிடப்படும்.

2025 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படும். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 உதவித்தொகை வழங்கப்படும். ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அரசுகள் தங்களது விருப்பப்படி மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.

முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே வேலை ஒரே ஊதியம் முறை அமல் அறிமுகப்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மற்றும் வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படும். விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. வருமான வரி விகிதம் மாற்றம் இன்றி தொடர காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிலையான வருமான வரி திட்டம் அமல்படுத்தப்படும்.

மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே வேலை ஒரே ஊதியம் முறை அறிமுகப்படுத்தப்படும். எம்எல்ஏ, எம்பிக்கள் கட்சித்தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.

தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். பி.எம்.கேர்ஸ் நெறிமுறைகேடு, பாதுகாப்பு ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்தப்படும். ஊடக சுதந்திரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

உணவு, உடை, காதல், திருமணம் ஆகியவற்றில் ஒருபோதும் தலையிட மாட்டோம். இந்தியாவின் எந்த பகுதியில் பயணிப்பதற்கும் வசதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்படும்.

10 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்ப பெறப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படாது. மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும். ரயில்களில் மூத்த குடிமக்களுக்காக வழங்கப்பட்ட கட்டண சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும். மீனவர் சமுதாயத்திற்கு தனி வங்கி, மீன்பிடிக்க தனி துறைமுகங்கள் உருவாக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பில் மீனவ சமூகங்கள் கணக்கெடுக்கப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

பட்டியலின மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டுவரப்படும் விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஊடக சுதந்திரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் வெறுப்பு பேச்சுகள், வெறுப்பு குற்ற செயல்கள், வகுப்பு வாத மோதல்கள், இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

பெண்கள், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வது, போலீஸ் என்கவுண்டர், கொலைகள் புல்டோசர் கொண்டு வீடு இடிப்பது தடுக்கப்படும். நாடு முழுவதும் சுங்க கட்டணம் குறைக்கப்படும். அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகளை தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.