கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தனி கலாச்சாரம் இருக்கிறது. எங்களை தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள் என்று நான் சொன்னால் டெல்லி வரை அலர்கிறது. ராசாவை கைது செய்யுங்கள் ராசா ஒரு தீவிரவாதி என்றெல்லாம் கூறுகிறார்கள்.
ஆனால் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி, ஜேபி நட்டா போன்றவர்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கலாச்சாரம் இருந்தால் தமிழ்நாடு மட்டும் தனித்து விளங்குகிறது என்கிறார்கள்.

இது இந்தியாவிற்கு நல்லது கிடையாது என்று ஜே.பி நட்டா கூறி இருக்கிறார். ஒன்றிய அரசுக்கும் இந்தியாவின் பாதுகாப்புக்கும் இடர்பாடு வரும்போது அதை பாதுகாக்கும் பொறுப்பில் நாங்கள் தான் இருக்கிறோம். போர்க்காலங்களில் எந்த முதல்வரும் கொடுக்காத அளவிற்கு நிதியை திரட்டி கொடுத்தது கலைஞர் தான். கலைஞர் வச்சு செய்வார். கலைஞர் மகன் ஸ்டாலின் கூப்பிட்டு வைத்து செய்வார் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார். உலகிற்கு திராவிட தத்துவத்தை வழங்கி அடுத்த பிரதமர் இந்தியாவுக்கு யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறினார்.