அரியானா மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சந்தீப் சிங். மேலும்   இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதாவது,  என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன்.

அப்போது மந்திரி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் என் டி-ஷர்ட்டை கிழித்து விட்டார் என அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து  அரியானா மந்திரி சந்தீப் சிங் விளையாட்டு துறையை ராஜினாமா செய்தார். அதன்பின் முதல் மந்திரி மனோகர் லால் கட்டாரிடம் தன் விளையாட்டு இலாகாவை ஒப்படைத்ததாக கூறினார்.

இருப்பினும் அவர் மந்திரி சபையில் இருந்து விலகவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என நிராகரித்த மந்திரி சுதந்திரமான விசாரணைக்கு அழைப்புவிடுத்துள்ளார். ஆகவே “என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகள் பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன். விசாரணை அறிக்கை வரும் வரையிலும் விளையாட்டு துறையின் பொறுப்பை முதல் மந்திரியிடம் ஒப்படைக்கிறேன்” என சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.