முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்போது தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கை தான் பரபரப்பாக பேசப்படுகிறது. நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்துவதற்காக நடிகர் தனுஷிடம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரண்டு வருடங்களாக அனுமதி கேட்டார்களாம். ஆனால் தனுஷ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் வெறும் 3 வினாடி BTS காட்சிகளை பயன்படுத்துவதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பதாகவும் நயன்தாரா குற்றச்சாட்டு தெரிவித்தார்.

மேலும் பழிவாங்கும் நோக்கத்தோடு தான் தனுஷ் இவ்வாறு நடந்து கொள்கிறார் என நயன்தாரா அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. சோசியல் மீடியாவில் நயன்தாரா தனுஷ் பற்றிய மீம்ஸ் வேகமாக பரவி வருகிறது. எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்கு நயன்தாரா சம்பளமே வாங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மற்றொருபுறம் நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரித்தது தனுஷ். அந்த படத்தில் பணிபுரிவதற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சம்பளம் வாங்கியுள்ளனர். ஆனால் படத்தின் நஷ்டத்தை சந்தித்தது தனுஷ் தான்.

திருமண ஆவண படத்தை விற்பனை செய்து நயன்தாரா பணம் சம்பாதிக்கும் போது, தான் தயாரித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்கு தனுஷ் ஏன் நஷ்ட ஈடு கேட்கக் கூடாது? என அவரது ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் பாடிய பாடல் வரிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதில் இரவு பகல் பாராது சினிமாவில் உழைத்து தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படத்தை தனுஷ் தயாரித்தார். நானும் ரவுடிதான் படம் நஷ்டமானது. அதில் வரும் காட்சிகளை வைத்து நீங்க காசு பாக்குறீங்க. படத்தை தயாரித்த நான் லூசா என தனுஷ் கேட்பது போல வசனங்கள் இருக்கும். அந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Greater Hosur (@greater_hosur)