
மலையாளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக மாறியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த திரைப்படம் அமரன். இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படமானது பாக்ஸ் ஆபிஸில் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் தண்டேல் படம் வெளியானது. இந்த பாடத்தில் இவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, “நான் எப்போதுமே தேசிய விருது வாங்க விரும்புகிறேன். ஏனென்றால் என் பாட்டிக்கு ஒருமுறை உடம்பு சரி இல்லாமல் போனது. அப்போது அவர் ஒரு புடவை கொடுத்து உன் திருமணத்திற்கு கட்டிக் கொள் என்றார். நானும் அடுத்தது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு பிறகு தான் பிரேமம் பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் என்றாவது ஒரு பெரிய விருதை வாங்குவோம் அப்போது அந்த புடவை அணிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். தேசிய விருது எதிர்பார்ப்பதற்கு காரணம் இது மட்டும் தான்” என்று கூறியுள்ளார்