உடல் பருமன் அதிகம் உள்ள காவலர்கள் களப்பணிகள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவலர்கள் மூன்று மாதங்களில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அசாம் மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், உடல் பருமனான காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், “சில காவலர்களின் உடல் தொடர்ந்து பருமனாகிக் கொண்டே உள்ளது. இதனால் அவர்கள் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைத்தால்தான் மீண்டும் பாதுகாப்பு பணிக்கு திரும்ப முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.