கூகுள் நிறுவனம் அலுவலகத்திற்கு வராமல் பல இடங்களில் இருந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வர வைப்பதற்காக கூகுள் ஹோட்டல் stay என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கூகுள் நிறுவனம் இருக்கும் ஏரியாவை விட்டு வெளியேறவே தேவை கிடையாது. கூகுளின் 4000 பேரை தங்கும் வசதியுள்ள 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேவி கேம்பஸ் ஹோட்டலில் அறை எடுத்து தங்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 99 டாலர் என்ற கணக்கில் இந்த அறைக்கு சலுகை விலையில் கொடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒரு முழு அபார்ட்மெண்ட்டை எடுத்து வாழ்வதைவிட இந்த சலுகை google ஊழியர்களுக்கு சிறப்பாக அமையும். இந்த சலுகையில் காலை உணவும் அடங்கும். அவசர அவசரமாக வெளியில் இருந்து கிளம்பி அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இருக்காது. பொறுமையாக கொஞ்சம் கூடுதலான நேரம் தூக்கத்தை போட்டுவிட்டு உடற்பயிற்சி செய்துவிட்டு ரூமிற்கு பக்கத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று விடலாம். இருப்பினும் அதிக பணி செய்வதற்காக கூகுள் ஊழியர்களை நிர்பந்திப்பதற்காக தான் இப்படி ஒரு திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்..