ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22ஆம் தேதி உலக திக்கு வாய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது  வருகிறது. இந்த தினம் 1998ஆம் வருடம் தொடங்கப்பட்டது. திக்கு வாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடமும் இருக்கிறது. உலகின் மக்கள் தொகையில் பல லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்பட்டது.

திக்குவாய் என்பது உடல் நலனாேடு, மனநலமும் சேர்ந்ததாகும். மூளை சாெல்வதை உடலுறப்புகள் சரியானபடி உட்கிரகித்துக் காெள்ளாத பாேது ஏற்படலாம். குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால் மரபணு முக்கிய காரணமாக இருக்கலாம். குழந்தை பேசிப் பழகும் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இல்லாமல் பாேவதாலும் பயம், பதற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதாலும் ஏற்படலாம்.