பெரும்பாலான வீடுகளில் சீலிங் ஃபேன் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் வீட்டில் சரியாக அதிலிருந்து காற்று வராது. அதற்கு சில காரணங்கள் உள்ள நிலையில் அதனை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது சீலிங் ஃபேன் எந்த உயரத்தில் சீரான காற்றை கொடுக்கிறது அது உங்கள் அறையில் எந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும். தவறான இடத்தில் அது பொருத்தப்பட்டு இருப்பதை கவனிக்காமல் தொழில்நுட்பக் கோளாறு என்று நாம் நினைக்கக் கூடாது. அதாவது தரையிலிருந்து குறைந்தபட்சம் ஏழு அடி உயரம் மற்றும் சுவர்களில் இருந்து 18 அங்குள்ள தூரத்தில் ஃபேன் பொருத்த வேண்டும். ஒருவேளை உச்ச வரம்பு உயரம் அதிகமாக இருந்தால் சிறந்த காற்றை பெறுவதற்கு தரையில் இருந்து 8 முதல் 9 அடி உயரத்தில் பேனை பொருத்த வேண்டும்.

உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப சரியான அளவிலான பேனை பொருத்துவது மிகவும் அவசியம். மின்விசிறிகள் பொதுவாக 29 முதல் 54 இன்ச் வரையில் கிடைக்கும். அதில் 52 அங்குலம் மின்விசிறி மிகவும் பிரபலமானது. அளவு முக்கியம் ஒருவேளை அறையின் அளவு 75 சதுர அடி வரை இருந்தால் 29 முதல் 36 இன்ச் அளவுள்ள மின்விசிறி போதும். அதனைப் போலவே அறையின் அளவு 74 முதல் 144 சதுர அடியாக இருந்தால் 36 முதல் 42 அங்குலம் மின்விசிறி பொருந்தும். சரியான அளவு மற்றும் உயரத்தில் மின்விசிறியை பொருத்துவதன் மூலமாக சீரான மற்றும் நிறைவான காற்றை நம்மால் பெற முடியும் என தெரிந்து கொள்ளுங்கள்.