கோடை காலத்தில் போன் சூடாகும் பிரச்சனை அதிகம். போனை சார்ஜ் செய்யும் போது இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் வெப்பத்தை தவிர்க்கலாம். சார்ஜ் செய்வதற்கு முன் முதலில் மொபைல் கவரை அகற்றவும். மேலும், தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்த வேண்டாம். பேட்டரி 20% ஆக இருந்தால் மட்டுமே சார்ஜ் செய்யவும். மேலும் 100% வரை சார்ஜ் போட வேண்டாம். உங்கள் மொபைலுடன் வந்த பிராண்டட் கேபிளை மட்டும் பயன்படுத்தவும். போன் சூடாக இருந்தால் அந்த நேரத்தில் சார்ஜ் செய்யாமல் இருப்பது நல்லது.