ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அதிமுக கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் தெரிவித்த நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும் வேட்பாளரையும் நியமிக்க இருக்கிறார்.

இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அபாயம் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பந்தக்கால் அமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. அதிமுக கட்சியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். மேலும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதை விட தேர்தல் களத்தில் சந்திப்பது தான் சரியானது என்றும் கூறினார்.