ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் பணிமனைகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று காலை முதல் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த பணிமனைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவின் பணிமனைக்கும் அதிகாரிகள் சீல் வைக்க வந்துள்ளனர். ஆனால் அதிமுகவினர் தேர்தல் பணிக்கு சீல் வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.