மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் பெண்களுக்கு மட்டும் பலனளிக்கும் வகையிலான திட்டங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதாவது மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு காலமாக உள்ளது. இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை ஒருமுறை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு முதலீட்டாளர்களுக்கு கணக்கு முதிர்வின்போது வழங்கப்படுகின்றது. இரண்டு வருட காப்பீடு திட்டமான இதில் ஏழு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு பாதியிலேயே பணத்தை திரும்ப பெற விரும்பினால் ஒரு வருடத்திற்கு பிறகு 40 சதவீதம் தொகையை பெறலாம். மீதமுள்ள 60 சதவீதம் தொகையை கணக்கு முதிர்வடைந்த பிறகு பெற்றுக் கொள்ள முடியும். இருந்தாலும் இறப்பு உள்ளிட்ட காரணத்தினால் கணக்கை மொத்தமாக மூடிவிட்டு மொத்தமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.