
பிரபல வில்லன் நடிகர் சஞ்சய் தத் ஹிந்தி படங்களில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். கேஜிஎப்2, லியோ போன்ற படங்களிலும் நடித்து அதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆகிவிட்டார். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த நிஷா பாட்டீல் என்பவர் இவருடைய தீவிர ரசிகர் ஆவார். இவர் கல்யாணம் செய்தால் சஞ்சய் தத்தை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்துள்ளார்.
இதனையடுத்து இவர் தன்னுடைய 62 வயதில் மரணம் அடைந்த போது தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்குஅனுப்புமாறு வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதனையடுத்து காவல் துறை சஞ்சய் தத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அப்போ அவர், “நான் நிஷா பாட்டீலை பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவருடைய இறப்பு எனக்கு வருத்தம் கொடுக்கிறது. நான் அவருடைய சொத்துக்கள் எதுவும் எடுக்கப்போவதில்லை. அந்த சொத்து அவரின் குடும்பத்திற்கு கிடைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். நிஷா பாட்டீலுக்கு கிட்டத்தட்ட 72 கோடி சொத்து இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.