மதுரை ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய ரயில் தடங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்கள் கடந்த ஒரு சில வாரங்களாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதாவது மேற்கண்ட ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதை இணைக்கும் பணிகள் கடந்த 27 நாட்களாக நடைபெற்றதால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் மற்ற அனைத்து ரயில்களும் அருப்புக்கோட்டை, மானாமதுரை மற்றும் காரைக்குடி மார்க்கமாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய ரயில் பாதைகள் இணைப்பு மற்றும் காலி ரயில் பெட்டிகளை ரயில் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்ல புதிய பாதைகள் மற்றும் புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வழக்கம் போல மதுரை வழித்தடம் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது