நாட்டின் முக்கிய திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருங்கால முதலீடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. முதல் கட்டமாக இன்று காலை குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி பொது பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இரண்டு பகுதிகளாக இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் இதை தாக்கல் செய்த பிறகு www.indiabudget.gov.in/economicsurvey என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பொதுமக்கள் இந்த ஆய்வறிக்கையை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.