பெண்களுக்கு இலவச பயண பஸ் பாஸ் வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

அதன்படி இன்று (ஜூன் 1ஆம் தேதி) முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு தான் முதலில் அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.