தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது “சிட்டாடல்” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டிலிருந்து இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகை சமந்தா தளபதி விஜயின் “தளபதி 69” என்ற கடைசி படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த தகவலை பற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தா நாக சைதன்யாவை மறக்கவில்லை என தொடர்ந்து சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு ரேஸ் காருக்கு அருகே இருந்து எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை சமந்தா இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது எனவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.