இன்னும் இரண்டு நாட்களில் வானில் அதிசயம் நிகழ உள்ளது. பசுமை வால் நட்சத்திரம் பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது. வடக்கு பகுதிகளில் ஏற்கனவே தென்படும் இந்த வால் நட்சத்திரத்தை பிப்ரவரி இரண்டாம் தேதி தொலைநோக்கி மூலம் மக்கள் பார்க்கலாம். இதை இனி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பார்க்க முடியும். சூரியனுக்கு மிக அருகில் வரும்போது மிகவும் வெப்பமடைவதால் தூசி மற்றும் வாயுக்களை இது வெளியிடுகிறது. அதனால் அவை ஒளிர்கிறது. C/2022 E3 (ZTF) என்பது இந்த வால் நட்சத்திரத்தின் அறிவியல் பெயர். ஆனால், இது பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் இதை பச்சை வால் நட்சத்திரம் என்கின்றனர்.