இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மக்கள் ஆதார் மையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டி இருக்கும். ஆனால் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் அலுவலகப் பணியை மேற்கொள்பவர்கள் இதற்காக அதிக நேரத்தை செலவிட முடியாது என்பதால் இதனை தவிர்க்க ஒரு புதிய மாற்று வழி சேவை தபால் துறை மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெற என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். அதில் டோர் ஸ்டெப் பேக்கிங் சர்வீஸ் ரெக்வஸ்ட் ஃபார்ம் என்பதை கிளிக் செய்து ஆதாரம் அப்டேட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு தேவையான விவரங்களை குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின் படி மாற்றலாம். இறுதியில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்து சமர்ப்பித்தால் உங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பிறகு தபால்காரர் வீட்டுக்கு வந்து உங்களுடைய பயோமெட்ரிக் ரேகையை பதிவு செய்து கொண்டு உங்களது அப்டேட் விவரங்களை மாற்றி தருவார்.