அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். இவர் மீது ஏராளமான வழக்குகள் இருக்கும் நிலையில் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவருக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் நிலையில் சரியான நபருக்கு வாக்களிக்க பகுத்தறிவு இருக்க வேண்டும் என்பதால் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவு தேர்வை எழுதி அதில் வெற்றி பெற வேண்டும் எனவும் இல்லை என்றால் ஆறு மாதம் ராணுவத்தில் வேலை செய்திருக்க வேண்டும் எனவும் தேர்தல் வாக்களிப்பு குறித்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.