தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமாக சரியான எடையில் சரியான முறையில் வழங்கப்படுகிறதாஅல்லது ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு ஆய்வு செய்யும்போது ரேஷன் பொருள்களின் எடையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கூட்டுறவுத் துறை செயலாளர் அங்கு ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளின் ஆய்வின்போது அதிகாரிகள் ரேஷன் பொருளின் எடை குறைவாக இருக்கிறது என்று காரணம் காட்டி ஊழியர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தினார். இவ்வாறு அதிகாரிகள் ஊழியர்களுக்கு அபராதம் விதிப்பதன் காரணமாக ஊழியர்கள் பயத்தில் எடை அதிகமாக தெரிவதற்காக ரேஷன் பொருட்களை நிரப்புகின்றனர். மேலும் அதிகாரிகள் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் போது தரமான ஆய்வாக மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.