எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களின் மூலமாக சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களில் சேர்வதற்கு அதாவது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய ஆதார் அட்டை மட்டுமே பயன்படுத்தி இந்த திட்டங்களில் சேரலாம் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்காக வாடிக்கையாளர்கள் இனி தங்களுடைய பாஸ்புக்கை வங்கிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.