இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கர்நாடக அரசு தற்போது பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

அது மட்டுமல்லாமல் மாநில அரசுடன் இணைந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் இதற்காக 230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர்.