தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சென்னை , விழுப்புரம், சேலம் , கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகின்றது. இதில் 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பேருந்துகள் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது சாலையோரம் உள்ள ஓட்டல்களில் நிறுத்தப்படுகிறது. இதில் அனைவரும் உணவு சாப்பிடுவதால் அரசு இதற்கு பல விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கும் சுகாதாரம் குறைவாக உள்ள கடைகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக புகார் இருந்தால் பயணிகள் தெரிவிக்கலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுந்தூரம் செல்லும் பேருந்துகள் எந்த ஹோட்டல்களில் நிறுத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல்களில் ஏதாவது புகார் இருந்தால் 1800 599 1500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.