இந்தியாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடம் என்றால் அது கொடைக்கானல் தான். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளதால் இங்கு இயற்கை பறந்து விரிந்து உள்ளது. இந்த நகரத்தை மலைகளின் இளவரசி என்று அழைக்கின்றனர். அதன்படி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் குறித்து எதிர்பார்க்கலாம்.

கோக்கர்ஸ் வாக்:

கொடைக்கானல் ஏரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு ஒருமுறை சென்று விட்டால் கொடைக்கானல் வரும்போதெல்லாம் இந்த இடத்தை மீண்டும் சென்று பார்க்க மறக்க மாட்டீர்கள்.

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி:

இந்த நீர்வீழ்ச்சி காப்பு காட்டிற்குள் உள்ளது. வாகனங்களில் சென்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பகுதியில் இதுதான் மிகப்பெரிய ஏரியாக கருதப்படுகிறது. இது சுமார் 24 க ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. படகு மூலமாகத்தான் இந்த ஏரியை சுற்றி பார்க்க முடியும்.

தற்கொலை முனை:

இந்த இடத்தை நேரில் சென்று பார்ப்பது மிகவும் ஆபத்தானது. இதனாலும் சராசரியாக 5 ஆயிரம் அடிகள் உள்ளது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகில் 5.5 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த தற்கொலை முனை அமைந்துள்ளது.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகம் பல வருடங்கள் சுற்றுலா தளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அரிய வகை பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. படிக்கும் குழந்தைகளை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.