தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் மின் தேவை சரியாக 15 ஆயிரம் மெகா வாட்டாகவும் மற்ற நேரங்களில் 14,000  மெகா வாட்டாகவும் இருக்கிறது. மேலும் சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் மின் தேவையான தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்பொழுது மின்வாரியம் துணை மின் நிலையங்களில் இருந்து பீடர் எனப்படும் மின் வழித்தடங்களில் மின்சாரத்தை அனுப்பி ட்ரான்ஸ்பார்மர் உதவியுடன் மின் விநியோகத்தை செய்கிறது .

இந்த நிலையில் பல இடங்களில் ஓவ ர் லோடு காரணமாக ட்ரான்ஸ்ஃபார்மர்கள் வெடித்து பழுதாகிக்கொண்டே இருக்கிறது. இப்பொழுதே இந்த நிலைமை என்றால்  2024 ஆம் வருடம் கோடை காலத்தில் மின் தேவை 20 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கையாக மின்னழுத்த பிரச்சனை ஏற்படும் இடங்களில் கூடுதல்  மின்சாதனங்களை நிறுவ மின் வாரியம் முடிவெடுத்துள்ளது .இதற்காக 200 கோடி செலவில் 250 kva எனப்படும் 2500 ட்ரான்ஸ்பார்மர்களை வாங்க முடிவெடுத்துள்ளது.