இந்தியாவில் சாலைகளில் வாகனங்கள் இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் என்பது கட்டாயமானதாக உள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எல்எல்ஆர் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டி காட்டி போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு நேரில் சென்று ஓட்டுனர் உரிமத்தை பெறலாம்.

ஆனால் தற்போது ஓட்டுனர் உரிமம் விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதாவது வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டி காட்டி போட்டோ எடுத்துக் கொண்ட பிறகு அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலமாக ஓட்டுனர் உரிமம் அனுப்பப்படும். முகவரி தவறாக இருந்தால் ஆர்டிஓ அலுவலகத்தில் சரியான முகவரியை எழுதிக் கொடுத்து தபால் மூலம் உங்களுடைய லைசென்ஸை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணம் மட்டுமே இதற்கு செலுத்தினால் போதும்.