இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு நல சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தாய் மற்றும் குழந்தை இருவரின் நல்வாழ்வு மற்றும் சிறந்த நலன்களை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு நல சட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் தாயின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கும் விதமாக எந்த ஒரு ஊழியர்களுக்கும் பாகுபாடு காட்டக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.