இந்தியாவில் தற்போதைய 30 மாநில முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள். ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி அதிகபட்சமாக 510 கோடி சொத்துக்களை கொண்டு உள்ளார் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதேசமயம் மிக குறைந்த சொத்துக்களை கொண்ட மூன்று முதல்வர்கள், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி 15 லட்சத்திற்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டு உள்ளார்.

கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் ஒரு கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டு உள்ளார். ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் ஒரு கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டு உள்ளார் என ஏடிஆர் தெரிவித்துள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் 3 கோடி சொத்துக்கள் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.