இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் ஆண்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் கூகுள் மற்றும் மொசிலா ஃபயர் பாக்ஸ் பிரவுசர்களின் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. இந்த இரண்டும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் என்பதால் இந்திய மக்கள் இதனை பயன்படுத்துவதால் இணைய பாதுகாப்பு விஷயத்தில் அச்சம் உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக உள்நாட்டில் பிரவுசர்கள் தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆத்மநிர்பார்தா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பிரவுசர்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கூகுள் குரோம், மொசிலா ஃபயர் பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ், ஓபரா மற்றும் பல்வேறு ப்ரவுசர்களுக்கு போட்டியிடும் விதமாக புதிய உள்நாட்டு பிரவுசர் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மூன்று கோடிக்கு அதிகமான மானியம் தர மத்திய அரசு தயாராக உள்ள நிலையில் இந்த செயல்பாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கண்காணிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.