
மாதம்பட்டி ரங்கராஜனின் விவாகரத்து சர்ச்சைக்கு அவருடைய மனைவி ஸ்ருதி ரங்கராஜன் முதல்முறையாக ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலமாக ஹீரோவாக நடித்தவர் தான் மாதம்பட்டி ரங்கராஜன். முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை .இதனை தொடர்ந்து பிசினஸில் ஆர்வம் காட்டினார். சினிமா பிரபலங்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு மாதம் பட்டி ரங்கராஜனை அழைப்பது வழக்கமாக இருக்கிறது. அவர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி ஷோவிலும் நடுவராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக மாதம்பட்டி ரங்கராஜன் தன்னுடைய காஸ்டியூம் டிசைனர் ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாகவும் ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை அந்த காஸ்டியூம் டிசைனர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு மாதம் பட்டி ரங்கராஜன் அளித்த பதில் என்னவென்றால், “என் வாழ்க்கை குறித்த எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது. அது பற்றி எல்லாம் நான் ஏன் பேச வேண்டும்? என்ற ஒரு கேள்வி இருக்கு இல்லையா. அதே நேரம் அவசியம் பேசியே ஆகணும் என்ற ஒரு காலகட்டம் வந்தால் அப்ப நானே டீடெய்லாக அதைப் பற்றி வெளியே சொல்வேன்” என்று கூறியுள்ளார்.