சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.   இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடை ஏதும் இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கோயில் அருகில் உள்ள வனப்பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம். 40 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார்