இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு அனைத்து பிரிவுகளிலும், வழிகளிலும் நிதியுதவியும், நிதி சேவைகளையும் கிடைப்பதை முக்கியமான இலக்காக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில்  சில்லறை விற்பனையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில், இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ200ல் இருந்து 500ஆக RBI அதிகரித்துள்ளது.

இந்த சேவையானது Near Field Communication மூலம் UPI பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. காய்கறி கடைகள் முதல் ரேஷன் கடை வரை Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.