அமெரிக்காவை சேர்ந்த கேலப் வுட் என்பவர் ஆன்லைனில் உணவும் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு மில்க் ஷேக் குடிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அதன் சுவை வித்தியாசமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவருக்கு அதன் பிறகு தான் தெரிந்தது அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது மில்க் ஷேக் இல்லை சிறுநீரென்று.

இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆன்லைன் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் ஆர்டரை டெலிவரி செய்த நபர் தான் தவறுதலாக மில்க் ஷேக் கப்பை மாற்றி கொடுத்தது தெரியவந்தது. அவர் தனது தவறை ஒப்புக் கொண்டதோடு பணி சுமை காரணமாக ஒரு கப்பில் சிறுநீர் கழித்ததாகவும் அதனை தவறுதலாக டெலிவரி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரிய செயலி டெலிவரி செய்த நபரை பணி நீக்கம் செய்துள்ளது.