தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசு பேருந்துகள் பெரும்பாலும் இயங்கவில்லை. அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுத்து வரும் நிலையில் இதை சாக்காக வைத்து ஆம்னி பேருந்துகள் அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றன.

மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை காண ஆம்னி பேருந்து கட்டணங்கள் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கூடுதலாக வசூல் செய்கின்றன. இதனால் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.