சமீபத்தில் மலேசியாவில் நடிகர் விஜய் ஆண்டனி படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் அபாய கட்டத்திலிருந்து மீட்டுள்ளனர்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி அவரது ட்விட்டரில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பாதுகாப்பாக மீண்டுவிட்டேன். முக்கியமான அறுவை சிகிச்சை நிறுவடைந்தது. விரைவில் அனைவருடனும் பேசுகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என கூறியுள்ளார்.