இந்தியாவில் தற்போது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்து புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதிய பாஸ்போர்ட் பெற விருப்பமுள்ளவர்கள் மத்திய அரசின் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்த அடுத்த 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் தற்போது புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை வழங்க வேண்டும்.

மேலும் பாஸ்போர்ட் பெற விருப்பமுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பாஸ்போர்ட் பெறுவதற்கே தேவையான ஆவணங்களை பதிவேற்றுவதற்கு டிஜி லாக்கர் செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது டிஜி லாக்கர் மூலமாகவே ஆவணங்களை பெறும் வசதியை பாஸ்போர்ட் அமைச்சகம் தற்போது விரிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.