இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் ஆதார் அட்டையில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான கால வரம்பை மூன்று மாதங்கள் உயர்த்தியுள்ளது.

இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த இலவச ஆபர் செப்டம்பர் 14ஆம் தேதியோடு நிறைவடைவதாக இருந்த நிலையில் தற்போது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக ஆதார் அட்டையை பயன்படுத்துபவர்கள் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.