கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் உடைய மகள் ஷர்மிளா. 24 வயதான இவர் தன்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்துள்ளது. அதனால் தன்னுடைய விருப்பத்தை தந்தையிடம் தெரிவிக்க அவர் தன்னுடைய மகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். அதன் பிறகு கடந்த 2019 ஆம் வருடம் முதலில் ஷர்மிளா ஆட்டோவை கோவை மாநகர பகுதியில் ஓட்டி பொது மக்களுடைய கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று சரண்யா கனரக வாகனத்தை இயக்குவதற்கு கற்றுக்கொண்டு முறையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட பிறகு ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். ஆண்களுக்கு நிகராக ஒரு பெண்ணும் சாதிக்க விரும்புவதை அறிந்து கொண்ட வீ வீ தனியார் பேருந்து நிறுவனத்தினர் ஷர்மிளாவுக்கு பேருந்து ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கியது.

இதனை அடுத்து முதன்முறையாக காந்திபுரம் முதல் சோமனூர் வரை செல்லும் வழிதடத்தில் ஷர்மிளா முதல்முறையாக நேற்று முதல் பேருந்து இயக்கினார். பொதுவாக ஆண்கள் மட்டுமே பேருந்து இயக்குவதை பார்த்த போது மக்கள் தற்போது முதல் முறையாக இளம்பெண் ஒருவர் ஓட்டுவதை கண்டு வியப்படைந்து பாராட்டி வருகின்றனர்