தமிழக சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம் வந்து என்ன பயன். எனவே எல்லோரும் பாராட்டும்படியான திட்டங்களை அமைச்சர் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். நம் தொழில்துறை அமைச்சரை மதுரை மக்கள் அனைவரும் ஆஹா ஓஹோ என பாராட்ட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணனை பார்த்து அனைவரும் ஆஹா ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரைக்காரங்க எல்லோரும் மாட்டை தான் பிடிப்பார்கள். ஆனால் நம்முடைய அண்ணன் புலிவாலையே பிடித்திருக்கிறார். மதுரைக்காரங்க ரொம்ப விவரம் என்பது புலியின் வாய் பக்கம் செல்லாமல் வாலை பிடிக்கும் போதே தெரிகிறது என்றார். மதுரைக்கு 600 கோடி மதிப்பிலான டைடல் பார்க் வர இருக்கிறது. அதன் பிறகு சிப்காட் ஒன்றும் வர இருக்கிறது. மேலும் சென்னையில் நெருக்கடியான சூழல் ஏற்படுவதால் பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மதுரை-தூத்துக்குடி வழித்தடத்தில் பல்வேறு விதமான தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.