இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவெடுத்து வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, ஆகஸ்ட் 2023இல் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர ஓணம், பார்சி புத்தாண்டு, ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் இயங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த மாத விடுமுறை பட்டியலில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.