ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 2020ம் வருடம் ஜூலை மாதம் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக  துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டும், அவருக்கு ஆதரவான 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில் தோல்பூர் எனும் இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் பங்கேற்று பேசியபோது, கடந்த 2020ம் வருடம் என் அரசை கவிழ்க்க மத்திய மந்திரிகள் அமித்ஷா, கஜேந்திரசிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான் போன்றோர் சதி செய்தனர். அதோடு காங்கிரஸ் MLA-க்களுக்கு பணம் கொடுத்தனர். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவிய 3 எம்எல்ஏக்கள்தான் இதுகுறித்து என்னை உஷார்படுத்தினர்.

எனினும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால் போன்றோர் ஆதரவு தர மறுத்து விட்டனர் என்று கூறினார். தற்போது சச்சின் பைலட் கூறியதாவது “முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல எனவும் வசுந்தரா ராஜே தான் தலைவர் எனவும் நினைக்கிறேன்.

இதனிடையே அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார், பா.ஜனதாவை பாராட்டுகிறார். முதன் முறையாக யாரோ ஒருவர் தங்களது சொந்தக் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை விமர்சிப்பதை நான் பார்க்கிறேன். பா.ஜ.க தலைவர்களை புகழ்வதும், காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதும் என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகும். இது முற்றிலும் தவறானது என சச்சின் பைலட் கூறியுள்ளார்.