உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு நிதி உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளின் நிலையை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் கல்வித் தகுதிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய உத்திரபிரதேச கல்வி வாரியத்தின் தலைவர், இது போன்ற விசாரணைகள் வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டதால் இந்த நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் இடையூறுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை எனவும் இது ஒழுங்காக செயல்பட வேண்டும் எனவும் இதனால் எதிர்காலத்தில் பள்ளிகளில் கவனம் செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது