இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 14 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பிலும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு அரபு நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.

இந்நிலையில் அல்ஜீரியா தங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.