தமிழகம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாலைகளை அமைக்க திட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அனுமதி இல்லாமல் வீட்டுமனை பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் முறையான வரைபட அனுமதி பெறாத வீட்டுமனை பகுதிக்கு நிதி ஒதுக்கும்  அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசு சார்பில் கொடுத்த விளக்கத்தை அனுமதி பெறாத பகுதிகளில் அரசு நிதிகள் செலவு செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசின் சார்பாக அறிக்கையின் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடும் பொழுது அதற்கான வழிமுறைகளை உயர் நீதிமன்ற  வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளை மீறும்  அதிகாரிகள் மீது அரசியல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.