நடப்பு கல்வியாண்டு முதல் MBBS மாணவர்களுக்கு NEXT தேர்வு அமல்படுத்தப்படும் என NMC அறிவித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட MBBS படிப்பில், முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தவர்கள் NEXT-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் ஓராண்டு பயிற்சி Dr ஆக பணியாற்ற அனுமதிக்கப்படுவர். அதன்பின் NExT-2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும் என NMC அறிவித்துள்ளது.

இந்த தேர்வு 2019 பிரிவு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கிடையாது. 2020 பிரிவு மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத வேண்டும். இதனை இறுதியான தேர்வாக கருத வேண்டாம். எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்பட்டாலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதிவு பெற்ற மருத்துவராக அங்கீகாரம் பெற முடியும் என்றும் மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.