நாட்டில் பிரபல தொழிலதிபரான அதானி முறைகேடு செய்துள்ளார் என ஹண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வர்த்தகத்தில் அதானி குழும  பங்குகள் சரிவடைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, தொழிலதிபர் அதானியின் சொத்துக்களின் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என குற்றம் சாட்டை பேசியுள்ளார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது, “நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்திய மிகப்பெரிய ஊழல்கள் அனைத்தும் காங்கிரஸ் தலைவர்கள்தான் செய்துள்ளனர். அதனால் ராகுல் காந்தி ஊழல் குறித்த தனது நினைவுத்திறனை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆய்வு செய்யப்படாத குற்றச்சாட்டுகளை மற்றும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக பேசியதற்காக அவருக்கு எதிராக பா.ஜ.க எம்.பி நிஷாந்த் துபாய் மக்களவையில் இன்று உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடியால் அதானி விமானம் பயன்படுத்தப்பட்டது என யாராவது நிரூபித்தால் பதவி விலக தயார்” எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.பி பிரதமருக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய அனைத்து சான்றுகளையும் அவர் கொடுக்க வேண்டும். இல்லையெனில் உரிமை மீறல் நோட்டீஸின் கீழ் அவர் உறுப்பினர் அந்தஸ்து இழக்க நேரிடும். மேலும் பிரதமர் மோடி பிரதமர் ஆன பின்பு அதானியின்  விமானம் ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை எம்.பி-க்களாக இருந்துவிட்டால் அவர்களுக்கு எந்தவித உரிமையும் உண்டு என்றால் அவர்களுக்கு கடமைகளும் உள்ளது. அவையில் ஒருவர் இல்லாத போது அவரது பெயரை பற்றி பேச கூடாது எனவும் பாஜக எம்.பி சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.